நம் வலைதளத்தின் புதிய முகவரி

Read in English | முகப்பு

வணக்கம். நாம் அனைவரும், இன்று எவ்வாறு இணைய இணைப்பு பெற்றிருக்கிறோம் என்பதிலிருந்து தான் நமக்கு மெஷ்நெட்டின் தேவை எழுகிறது. ஏன் தேவை என்பதைப் பற்றிய பட விளக்கங்களுடன் எளிய தமிழில் விளக்க முயற்ச்சித்துள்ளோம்.

இன்று நாம் எப்படி இணைந்திருக்கிறோம்?

நம் வீட்டிற்கு இணைய இணைப்பு வேண்டும் என்றால் நாம் முதலில் யாரை அணுகுவோம்? ஏதேனும் ஒரு இணைய சேவை வழங்கும் அமைப்பு அல்லது நிறுவனத்தை. இவர்களை தான், இணையச் சேவை வழங்கி (Internet Service Provider) என்று அழைக்கிறோம். எடுத்துக் காட்டாக, இந்தியாவில் பெரும்பாலானோர் அணுகும் ISP-க்களில் சில,

 1. BSNL
 2. ஏர்டெல் (Airtel)
 3. ஏ.சி.டி பிராட்பேண்ட் (ACT Broadband)
 4. மேலும் பல ISP-க்களின் தொகுப்பு

இவர்களில் ஏதேனும் ஒருவரை நாம் அணுகினால், அவர்களிடம் இருக்கும் பயன்பாட்டுக் கட்டணத் திட்டங்களை (Data Usage Pricing Plans) நம்மிடம் காண்பித்து, இதில் ஏதேனும் ஒரு திட்டத்தை தேர்ந்தெடுக்கச் சொல்வார்கள். இணைய இணைப்பை இரண்டு வகைகளில் வழங்குகிறார்கள்,

 1. கம்பிகளின் வழியாக (Wire / Cables)
 2. கம்பியில்லா வயர்லெஸ் (Wireless)

கம்பி வழி இணைப்பு என்றால், மின்சார இணைப்பு போல், நம் வீடு வரைக்கும் கம்பியை தொடரச் செய்வர். கம்பியில்லா வயர்லெஸ் இணைப்பு என்றால் நம் வீடோ அல்லது அருகில் உள்ள உயரமான கட்டிடத்தின் கூரையில் வயர்லெஸ் டிரானஸ்சீவரை (Transceiver - சிக்னல்களை அனுப்பவும், பெறவும் பயன்படுத்தப்படும் சாதனம்) அமைத்து அதிலிருந்து கம்பியை வீட்டிற்குள் கொண்டு வருவார்கள். இதில் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி என்னவென்றால், பல்வேறு இணைய சேவை வழங்கிகள் தங்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் இணைந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே, நாம் ஒரு இணைய சேவை நிறுவனத்திடம் இணைப்பு பெற்றிருந்தாலும் (உதாரணத்திற்கு, BSNL), நமது நணபர்கள் வேறு ஒரு நிறுவன்த்திடம் இணைப்பு பெற்றிருந்தாலும் (உதாரணத்திற்கு, Airtel) ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடிகிறது.

சரி, இப்பொழுது நாம் ஒரு காட்சியை சான்றாக கருதிக் கொள்வொம், இக்காட்சியில் இருவர் உள்ளனர் (கவிதா மற்றும் கார்த்திக்). அவர்கள் இருவரும் ஒரே வீதியில் இருக்கும் வெவ்வேறு குடியிருப்புகளில் வசிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதோடு, அதில் கார்த்திக் Airtel-லிருந்தும், கவிதா BSNL-லிருந்தும் இணைய இணைப்பு பெற்றிருக்கிறார்கள் என்றும் கருதிக் கொள்வோம். கார்த்திக் கவிதாவை தொடர்பு கொள்ள விரும்புகிறான். எனவே Facebook Messenger (அல்லது) Telegram (அல்லது) Whatsapp போன்ற ஒரு செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்புகிறான். தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

 1. குறுஞ்செய்தி கார்த்திக்கின் கைப்பேசியை விட்டுச் செல்கிறது.
 2. குறுஞ்செய்தி கார்த்திகின் ISPயை (Airtel) அடைகிறது.
 3. கார்த்திக்கின் ISP (Airtel), Facebook சர்வரை அடைவதற்கான வழியைக் காண்டுபிடிக்கிறது. அந்த சர்வர் வேறொரு நாட்டில் உள்ளது.
 4. இப்பொழுது இந்த Facebook சர்வர், அந்த குறுஞ்செய்தியை அதனுடைய ISPக்கு (எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) அனுப்பிவைக்கிறது.
 5. இந்த Facebook சர்வரின் ISP, கவிதாவின் ISPயை (BSNL) அடைய வழி தேடிக் கண்டுக் கொண்டு, குறுஞ்செய்தியை கவிதாவின் ISP-க்கு (BSNL) கொண்டு செல்கிறது.
 6. இறுதியாக, கவிதாவின் ISP (BSNL) கார்த்திக் அனுபிய அந்த குறுஞ்செய்தியை கவிதாவின் கைபேசிக்கு கொண்டு சேர்க்கிறது.

மேலே சான்றாக விவரிக்கப்பட்டுள்ளக் காட்சியை கீழே உள்ள படத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு சாதனத்திலிருந்து இருந்து குறுஞ்செய்தி மற்றொரு சாதனத்திற்கு செல்வதை புரிந்துக்கொள்ள பச்சை வரியைப் பின்தொடருங்கள்.

குறிப்பு: நடைமுறையில், குறுஞ்செய்தி, ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்குச் செல்வதற்கு, பல இடைநிலை சாதனங்கள் தேவைப்படும். ஆனால், இதை எளிமைப்படுத்த நாங்கள் இறுதி சாதனங்கள் மற்றும் ஒரு சில இடைநிலை சாதனங்களை மட்டும் காண்பித்துள்ளோம்.)

இதில் என்ன சிக்கல்?

இதனை எவ்வாறு எதிர்கொள்வது?

நாம் எப்படி இணைய வேண்டும்?